Enable Javscript for better performance
திருச்செங்கோட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 22nd November 2017 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்திட வலியுறுத்தி,  நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மாவட்டத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைவர் பூபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்தத் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பாலின் தரத்தை அறியும் வகையில் பால் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும்  மில்க் ஸ்கேனர், எடை இயந்திரங்கள் மற்றும் இன்டர்நெட் வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் ஆவின் நிர்வாகம் ஏற்படுத்த  வேண்டும்,
    பசும்பாலுக்கு ரூ. 35 ம், எருமை பாலுக்கு ரூ.45ம் என பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்திட வேண்டும், கால்நடை தீவனங்களை  மானிய விலையில் தமிழக அரசு வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கி இல்லாமல் தொகையினை வழங்கிட வேண்டும், போனஸ் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்.  ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை விரிவுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai