Enable Javscript for better performance
நீதிமன்ற பரோலில் வெளிவந்தவர் தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்ற பரோலில் வெளியே வந்த மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த கொலை குற்றவாளி  காலக்கெடு முடிந்ததும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் தேடி வருகின்றனர்.
    மல்லசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் செல்வராஜ் (45). இவர், கடந்த  2009-ஆம் ஆண்டு மல்லசமுத்திரம் கருப்பணார் கோயில் அருகில் தனது உறவுக்கார பெண் செல்வியை கொலை செய்ததாகக்
    கூறப்படுகிறது.
    மல்லசமுத்திரம் போலீஸார்  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதங்களுக்குப் பிறகு பரோலில் வெளிவந்த செல்வராஜ், நீதிமன்றத்தல் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். இவரைப் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் மல்லசமுத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai