Enable Javscript for better performance
ரூ. 6.5 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 6.5 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

    By DIN  |   Published on : 22nd November 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொத்தனூர் பேரூராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் ரூ. 6.5 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம்  செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
    வெங்கமேடு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொத்தனூர் பேரூராட்சிக்கென தனியாக ரூ. 6.5 கோடி மதிப்பில் 4  லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
    இதையடுத்து பொத்தனூர் பேரூராட்சிக்குள்பட்ட காவிரி ஆற்றில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர் வெங்கமேடு சந்தை பகுதியில் 4 லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்து அதற்கான திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.
    இதற்கான விழா வெங்கமேடு சந்தை பகுதியில் நடைபெற்றது.  விழாவிற்கு பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்லத்துரை, உதவி இயக்குநர்கள் நடராஜன், பாலாஜி,  செயற் பொறியாளர் ராஜேந்திரன், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன்,பேரூராட்சி செயல் அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai