Enable Javscript for better performance
சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 23rd November 2017 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் 161 இடங்களில் நியாய விலைக் கடைகள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    நாமக்கல் நகரில் உள்ள சந்தைப்பேட்டை புதூர் கருப்பண்ணன் தெருவில் உள்ள நியாய விலைக் கடை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் சி.மணிமாறன்  முன்னிலை வகித்தார். 
    நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் 161 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
    காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தலைமையில்...
    நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சேந்தமங்கலம் சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
    ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தார். திமுக நகர பொறுப்புக் குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முஸ்தபா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக் கடையில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    திருச்செங்கோட்டில்...
    நகரச் செயலர் நடேசன், சோழசிராமணியில் மாணவர் அணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், சூரியம்பாளையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் செழியன், காந்தி நகரில் வர்த்தக அணி அமைப்பாளர் கிரிசங்கர் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ராசிபுரத்தில்...
    ஆர்.சி.எம்.எஸ்., கூட்டுறவு விற்பனை சங்கம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கரும், பாரதிதாசன் சாலைப் பகுதியில் முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலுவும், குமாரபாளையத்தில் கே.பி.ஜெகநாதனும், கூனவேலம்பட்டிபுதூரில் ஊராட்சி செயலர் மா.சரவணனும், வெண்ணந்தூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.ராஜேஷ்குமாரும் தலைமை வகித்தனர்.
    குமாரபாளையத்தில்...
    காவேரி நகர் அமுதம் அங்காடி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தக்கு கட்சியின் நகரச் செயலர் கோ.வெங்கடேசன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலர் எஸ்.சேகர் தலைமையில் சுந்தரம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பரமத்தி வேலூரில்...
    கபிலர்மலையில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில் ஒன்றியச் செயலர் சண்முகம் முன்னிலையில் 70-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதே போல் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் முன் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai