Enable Javscript for better performance
பூப்பந்துப் போட்டி: பாவை மாணவியர் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அளவிலான மாணவியருக்கான பூப்பந்துப் போட்டியில், பாவை கல்லூரி மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
    மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பூப்பந்துப் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பாவை கல்லூரி மாணவியர் இரண்டாம் இடம் பெற்றனர்.
    ஜூனியர் பிரிவில் மாவட்டங்களுக்கு இடையிலான திண்டிவனத்தில் நடைபெற்ற போட்டியில்  இரண்டாம் இடமும், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர்.
    முனைவர் என்.மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான பூப்பந்து போட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர்.
    பாலிடெக்னிக்: இதே போல், பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பூப்பந்துப் போட்டியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வென்று சாதனை புரிந்துள்ளனர்.
    சேலம் மண்டல பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான பூப்பந்துப் போட்டி மைசூரி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் அரையிறுதிப் போட்டியில் மைசூரி பாலிடெக்னிக் கல்லூரி அணியையும், இறுதிப் போட்டியில் தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி அணியையும் வென்று கோப்பையை கைப்பற்றினர். 
    போட்டியில் வெற்றிபெற்ற பாவை பாலிடெக்னிக் மாணவர்கள் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ள மாநிலஅளவிலான பூப்பந்துப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 
    வெற்றிபெற்ற மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (நிர்வாகம்) முனைவர்.கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர் எம்.பிரேம்குமார், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai