Enable Javscript for better performance
பிஜிபி. வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வயல்வெளி பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பிஜிபி. வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வயல்வெளி பயிற்சி

    By DIN  |   Published on : 24th November 2017 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் பிஜிபி., வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள், ராசிபுரம் வெள்ளாளப்பட்டி பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி முறையை வயல்வெளிக்குச் சென்று பார்வையிட்டனர்.
    பிஜிபி கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வியின் ஒரு பகுதியான வயல்வெளி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம் மகாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் மாணவர்கள் வெள்ளாளப்பட்டி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு தன்ராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் குச்சிக்கிழங்கு சாகுபடி முறையை பார்வையிட்டு,
    கேட்டறிந்தனர்.
    மேலும் அவரது கண்டுபிடிப்பான நிலக்கடை பயிர் அறுக்கும் இயந்திரம், மஞ்சள் அறுவடை இயந்திரம், குச்சிக் கிழங்கு அறுவடை இயந்திரம், கிழங்கு வெட்டும் இயந்திரம், புதுவித கலப்பை, மஞ்சள் கலப்பை, விதைப்பு இயந்திரம், களை பறிப்பு இயந்திரம் போன்றவற்றை பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai