Enable Javscript for better performance
புதை சாக்கடை இணைப்பு: குடியிருப்புகளுக்கு வழங்க பாஜக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதை சாக்கடை இணைப்பு: குடியிருப்புகளுக்கு வழங்க பாஜக கோரிக்கை

    By DIN  |   Published on : 24th November 2017 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியிருப்புகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
    பாஜக மாநில மகளிர் அணி செயலர் ரோகிணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நாமக்கல் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
    நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிர் வீதியில் முல்லை மஹால் திருமண மண்டபம் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுநீர் குழாய்கள் புதை சாக்கடையுடன் இணைக்கப்படாமல் உள்ளன. 
    இதனால் இப்பகுதியில் உள்ள ஓடையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
    இதனால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவ காரணமாகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதி வழியாக வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai