Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சல்: 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே மர்மக் காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை புதன்கிழமை இரவு உயிரிழந்தது.
    நாமக்கல் அருகே சாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்,  இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு தன்சிகாஸ்ரீ என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது.  குழந்தைக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, குழந்தையை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர்.  அங்கு குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. 
    இதையடுத்து,  கடந்த 20-ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் தன்சிகாஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.  பின்னர்,  21-ஆம் தேதி தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த நிலையில், புதன்கிழமை இரவு தன்சிகாஸ்ரீ உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai