Enable Javscript for better performance
இளம் வயது திருமணம் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளம் வயது திருமணத்தை தடுக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாமகிரிபேட்டை காவல்துறை சார்பில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
    இதில் கலந்துகொண்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு இளம்வயது திருமணம், பாலியல் தொந்தரவு உள்ளிட்டவைகளில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும்,  மாணவ-மாணவியர் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளித் தலைமையாசிரியர் பார்வதி, நாமகிரிபேட்டை காவல் உதவி ஆய்வாளர் திலகவதி உள்ளிட்டோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai