Enable Javscript for better performance
பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் களப் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் களப் பயணம்

    By DIN  |   Published on : 25th November 2017 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் -புதன்சந்தை மின்னாம்பள்ளி அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய நடுப் பள்ளி மாணவர்கள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அத்தனூரில் உள்ள வன விரிவாக்க மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    வன விரிவாக்க மையத்தில் வைக்கப்பட்டிருந்த புவியியல், அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். அரியவகை விலங்களின் பரிணாம வளர்ச்சி, சூரிய குடும்பம், அடுக்குப் பாறை வகைகள், கண்டங்கள், மழை நீர் சேகரிப்பு, தாவர, மரங்களின் வகைகள், அவற்றின் வளர்ச்சி, டைனோசர் விலங்கு போன்றவற்றை மாணவியர் பார்வையிட்டனர். வனவிரிவாக்க மைய அலுவலர் சக்திவேல், வனச்சரகர் பாலு ஆகியோர் மாணவியருக்கு நில அமைப்புகள், வன அமைப்புகள், வன உயிரினங்கள் குறித்து விளக்கினர்.  இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுமதி, தலைமையாசிரியர்கள் ஜெ.பாபு, வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    அதேபோல், அண்ணாநகர் பள்ளிக்குச் சென்ற மாணவியர் அங்குள்ள மாணவியருடன் கற்றல் திறன் மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடினர். ஆங்கிலப் பாடம் காணொலி காட்சிகள் மூலம் காண்பிக்கப்பட்டது. பின்னர் களப் பயணமாக நைனாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai