Enable Javscript for better performance
தென் இந்திய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தென் இந்திய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

    By DIN  |   Published on : 26th November 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியில் முதலாவது தென் இந்திய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள், ஏழாவது தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நவம்பர் 24-ஆம் தேதி துவங்கி 26-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
    தென் இந்திய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள், தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் தில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    14 வயதுக்குட்பட்டவர்கள், 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள், 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற பிரிவுகளின் கீழ் கபடி, வில்வித்தை, கோ-கோ, கையுந்து பந்து, கைப்பந்து, கால் பந்து, யோகா, இறகு பந்து, கூடை பந்து, ஹாக்கி, மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ப. மாலாலீனா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். தேசிய ஊரக விளையாட்டுக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி.பி. மகேஷ்பாபு வரவேற்றார். ஞானமணி கல்வி நிறுவனங்கள், ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் முனைவர் தி. அரங்கண்ணல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்துப் பேசினார்.
    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கே. விவேகானந்தன், முதன்மை நிர்வாக அதிகாரி பி. பிரேம்குமார், ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநர் உஷா நடராஜன், முதல்வர் ஜி. ஆரோக்கியராஜ், நிர்வாக அதிகாரி ராமன் குமாரமங்கலம், தேசிய ஊரக விளையாட்டுக் குழுமத்தின் பொதுச் செயலாளர் பர்தீப் கட்டாரியா, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோர் நல்வாழ்வுச் சங்க அலுவலர் சி.டி. பெரிய கருப்பன், தேசிய ஊரக விளையாட்டுக் குழுமத்தின் துணைத் தலைவர் சந்தீப் கஸ்யப், தேசிய கால்பந்து விளையாட்டுச் செயலாளர் விகாஷ் கிரேவல், மல்யுத்த பயிற்சியாளர் ரஜினிஸ் குனியா, நாமக்கல் மாவட்ட ஊரக விளையாட்டுக் குழுமத்தின் தலைவர் பாலு, தேசிய ஊரக விளையாட்டுக் குழுமத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ரஞ்சித் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai