Enable Javscript for better performance
நாமக்கல்லில் ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை மற்றும் கொங்குநாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள அரிமா சங்க கட்டடத்தில் ரத்ததான முகாமை சனிக்கிழமை நடத்தின.
    முகாமுக்கு மாவட்டச் செயலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் துரை, பேரவை மாவட்டத் தலைவர் பழனிமலை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் தலைவர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை நிலையச் செயலர் செந்தில்ராஜா, துணைத் தலைவர் முத்துசாமி, பொருளாளர் செல்வராஜா, மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், விவசாயி அணிச் செயலர் ரவி, கொள்கை பரப்புச் செயலர் கந்தசாமி உள்பட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். நகர செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai