Enable Javscript for better performance
அமைச்சுப் பணியாளர்களுக்கான ஆசிரியர் பதவி உயர்வை  வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சுப் பணியாளர்களுக்கான ஆசிரியர் பதவி உயர்வை  வழங்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 27th November 2017 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்: ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஆசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என கல்வித் துறை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கராசு, செங்கோட்டுவேலு, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் விவேக் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் முருகேசன், நாமக்கல் மாவட்டச் செயலர்  ஜெயரத்தினகாந்தி, மாநில மகளிரணி துணைத் தலைவி ஈஸ்வரி ஆகியோர் பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவிக்க வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு துணை இயக்குநர் மற்றும் நிர்வாக அலுவலக பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏற்கெனவே இருந்த நேர்முக உதவியாளர் (கணக்கு)பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்.
    ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் நிதியாளர் பணியிடம் ஏற்படுத்திடவேண்டும். அமைச்சுப் பணியாளர்களில், ஆசிரியர் கல்வித்தகுதி பெற்றுள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 2 சதவீதம் ஆசிரியர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி மைதிலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மகளிர் அணி செயலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai