Enable Javscript for better performance
எக்ஸல் கல்லூரியில் மாணவர்களுக்கு ரோட்ராக்ட் பட்டயச் சான்றிதழ் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    எக்ஸல் கல்லூரியில் மாணவர்களுக்கு ரோட்ராக்ட் பட்டயச் சான்றிதழ் அளிப்பு

    By DIN  |   Published on : 27th November 2017 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
    விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் தர்மேஷ் ஆர். பட்டேல் பங்கேற்றுப் பேசினார். தலைமை விருந்தினராக ரோட்டரி மாவட்ட  முன்னாள் ஆளுநர் டிக்குலோகராஜு சத்யநாராயண் பங்கேற்று பட்டயச் சான்றிதழ் வழங்கிப் பேசினார்.  முன்னதாக  மாணவிகள் நீத்து, அம்ருதா, மாளவிகா ஆகியோரின் வரவேற்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர்  கே.பி.ரவிச்சந்திரன் வரவேற்றார்.  எக்ஸல் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் ரோட்ராக்ட் தலைவர் யு. ஜெகதீஸ் நன்றி கூறினார். விழாவில் எக்ஸல் பார்மஸி கல்லூரி முதல்வர் ஆர். மணிவண்ணன்,  பிசியோதெரபி கல்லூரி முதல்வர் எ. அய்யப்பன், ஹெல்த் சயின்ஸ் கல்லூரி முதல்வர் எஸ். பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai