Enable Javscript for better performance
கலப்படத்தைத் தடுக்க ஜவ்வரிசி ஆலைகளில் சிசிடிவி கேமரா- Dinamani

சுடச்சுட

    

    கலப்படத்தைத் தடுக்க ஜவ்வரிசி ஆலைகளில் சிசிடிவி கேமரா

    By DIN  |   Published on : 27th November 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்: கலப்படத்தைத் தடுக்க ஜவ்வரிசி ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

    நாமக்கல் மாவட்டத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மக்காசோள மாவு மற்றும் ரசாயனம் கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை முற்றிலும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம் எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி,   சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

    கடந்த சில மாதங்களாக ஜவ்வரிசி உற்பத்தி  ஆலைகள் மக்காச்சோளமாவு மற்றும் ரசாயனம் கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிக்கின்றன என்ற புகார் வருகின்றன. அவ்வாறு ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் கண்டறியப்பட்டால், அந்த ஆலை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள்மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    மேலும் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் ஜவ்வரிசி ஆலைகள் அனைத்திலும், ஆலையின் நுழைவு வாயில், வெளியில் செல்லும் இடம், கிழங்கு இறக்கும் இடம், கிழங்கு தோல் உரிக்கும் இடம், கிழங்கு அரவை இடம், மாவு தொட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் உடனடியாக பொருத்தி தங்குதடையின்றி 24 மணி நேரமும் தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். 

    அவ்வாறு சிசிடிவி கேமராக்கள் பொருத்திடாத ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலை நிறுவனத்தினர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai