Enable Javscript for better performance
கந்தம்பாளையம் எஸ்.கே. பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கந்தம்பாளையம் எஸ்.கே. பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    By  பரமத்தி வேலூர்,  |   Published on : 28th November 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே. பள்ளியில் மாணவர்களின் நுண் திறனை வெளிப்படுத்தும் விதமாக அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
     கண்காட்சியில் நியூட்டனின் மூன்றாம் விதியை விளக்கும் மாதிரி, பேசும் ரோபோ, பளு தூக்கும் இயந்திரத்தின் செயல்பாடு, ஆழ்துளையிடும் இயந்திரம், வேதியியல் வினைக்கோட்பாடு, மனித இதய செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த மாதிரி வடிவங்களைப் பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
     மேலும் மாணவர்களின் பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை தனது தனித்திறன் மூலம் வெளிப்படுத்தினர். சிறப்பான முறையில் திறனை வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களை பள்ளியின் தலைவர் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
     பள்ளியின் முதல்வர் ஜெயந்தி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai