குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
By ராசிபுரம், | Published on : 28th November 2017 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டியில் கடந்த 45 நாள்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரத்தை அடுத்துள்ளது கட்டனாச்சம்பட்டி. இங்கு, சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் கடந்த 45 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கட்டனாச்சம்பட்டி ஊராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தார்களாம்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் கூறுகின்றனர். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு ஊராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.