Enable Javscript for better performance
திருச்செங்கோட்டில் பராமரிப்பில்லாத மயானங்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் பராமரிப்பில்லாத மயானங்கள்

    By  திருச்செங்கோடு  |   Published on : 28th November 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட பல வார்டுகளில் பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கும் மயானங்களை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
     திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அமைந்துள்ள மயானங்கள் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் அதிகளவில் புதர்கள் ஆள் உயரத்துக்கு வளர்ந்துள்ளன. குறிப்பாக கரட்டுப்பாளையம், சட்டையம்புதூர், மாங்குட்டைபாளையம் வார்டுகளில் உள்ள மயானங்கள் மின்விளக்கு வசதி இல்லாமலும், சுற்றுச்சுவர்கள் பழுதடைந்தும் உள்ளன.
     கேட் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மலம் கழிக்கும் இடமாக மயானத்தைப் பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேட்டினையும் ஏற்படுத்துகிறது.
     இறுதி சடங்குகள் செய்ய வருபவர்கள் நிற்பதற்கு கூட இடமில்லாததால் சடங்குகளை அவசரக் கதியில் முடித்துவிட்டுச் செல்கின்றனர். குப்பைகளைக் கொட்டியும், பராமரிப்பு இல்லாததாலும் புதராக இருப்பதால் சமூக விரோதிகள் மது குடிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளன.துர்நாற்றம் எப்போதும் வீசிக்கொண்டே இருக்கிறது. கூட்டபள்ளி மயானம் கடந்த சில வருடங்களாகப் பணி தொடங்கப்பட்டு வேலைகள் முடிவடையாமல் உள்ளன. இறந்தவர்கள் இறுதி சடங்குகளை நிறைவுடன் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக பொதுமக்கள்ஆதங்கம் தெரிவித்தனர். மயானங்களை பராமரிப்பு செய்து மின்வசதி, கழிப்பிட வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai