Enable Javscript for better performance
பொத்தனூரில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை, வெள்ளி கிரீடம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பொத்தனூரில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை, வெள்ளி கிரீடம் திருட்டு

    By  பரமத்திவேலூர்,  |   Published on : 28th November 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் பூட்டிய வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவினுள் இருந்த அரை பவுன் தோடு, ஒன்றரை கிலோ வெள்ளி கிரீடம் மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
     பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜோதி (60). இவரது கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாலும், மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாலும் தனியாக வசித்து வருகிறார்.
     கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு ஜோதி சென்றுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டினுள் சென்றதும் வீட்டின் ஓடு உடைக்கப்பட்டிருப்பதும், பீரோ உடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
     இதில் பீரோவில் இருந்த அரை பவுன் தோடு, மதுரை வீரன் கோயிலின் ஒன்றரை கிலோ எடையுள்ள இரண்டு வெள்ளி கிரீடம் மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai