Enable Javscript for better performance
ரூ 2.75 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள் காருடன் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ரூ 2.75 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள் காருடன் பறிமுதல்

    By  திருச்செங்கோடு  |   Published on : 28th November 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு மதுவிலக்கு காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகளும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரும் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.
     நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு உத்தரவுபடி கூடுதல் எஸ்.பி. (மதுவிலக்கு) செந்தில் தலைமையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பன்னீர் செல்வம், எஸ்.ஐ.க்கள் ராமகிருஷ்ணன், ஞானசேகரன், தலைமைக் காவலர் கோபி உள்ளிட்ட தனிப்படையினர் தங்களுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை நடத்தினர்.
     அப்போது அந்த வழியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில் காரின் பின்புறத்திலும், சீட்டுக்கு அடியிலும் நூதன முறையில் மதுப்புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரிலிருந்த 373 மதுப்புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 2. 75 லட்சமாகும். கார் ஓட்டுநரான புதுச்சேரியைச் சேர்ந்த மணியையும் (45) போலீஸார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai