Enable Javscript for better performance
வடகரையாத்தூரில் கழிப்பறை கட்டடப் பணி தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    வடகரையாத்தூரில் கழிப்பறை கட்டடப் பணி தாமதம்

    By  பரமத்தி வேலூர்,  |   Published on : 28th November 2017 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூரில் மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள பொது சுகாதார வளாகக் கட்டடப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடகரையாத்தூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் போடப்பட்டு ரூ. 6.20 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி துவக்கப்பட்டது.
     ஆனால், இப்பணி நிறைவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இப்பணியை மீண்டும் துவக்கி பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai