Enable Javscript for better performance
கூட்டு முயற்சி இருந்தால்தான் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்: மருத்துவர் ஏ.பி. நந்தகுமார்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டு முயற்சி இருந்தால்தான் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்: மருத்துவர் ஏ.பி. நந்தகுமார்

    By DIN  |   Published on : 29th November 2017 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவத் துறையில் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சி இருந்தால்தான் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றார் உடற்கூறு மருத்துவர் ஏ.பி.நந்தகுமார்.
    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி சார்பில் 56-ஆவது தேசிய மருந்தியல் வார விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மருத்துவர் என். மதன் கார்த்திக் தலைமை வகித்தார். எக்ஸல் மருத்துவமனை மருத்துவர் கணேசன், எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் மருத்துவர் ஏ.அய்யப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனை உடற்கூறு மருத்துவர் ஏ.பி. நந்தகுமார் பேசியது:
    ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் பல்துறைகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. சிகிச்சையில் நேரடியாக சிறப்பு மருத்துவர், மருத்துவர் குழு, செவிலியர் போன்றோரும், மறைமுகமாக முடநீக்கியல்,மருந்தியல் என அனைத்து துணை மருத்துவத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்டு முயற்சி இருந்தால்தான் மருத்துவத் துறையில் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
    துணை மருத்துவ பணிகளில் பல்வேறு வகைப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. 
    குறிப்பாக பல்முனை சுகாதார சேவை வழங்குபவர், ஆற்றுப்படுத்துநர், ஆய்வாளர், நெறியாளர், மருந்தியல் தொழிற்சாலைகள் எனவும் பல்வேறு வகைப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. 
     எந்த வேலை செய்தாலும், வேலையில் உற்சாகம், ஒழுக்கம், ஒத்துழைப்பு, நிர்வாகத்திறன் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சி இருந்தால்தான் வெற்றி பெறமுடியும். இவற்றுடன் நமது சக்தி, நம்பிக்கை ஆகியவற்றையும் சிகிச்சையின்போது பயன்படுத்த வேண்டும் என்றார். 
     மேலும் விழாவில் கோவை கே.எம்.சி.எச்.பார்மசி கல்லூரி மருந்தியல் செயல்பாட்டுத்துறைத் தலைவர் மருத்துவர் கே.டி. மணி செந்தில்குமார் பேசியது:
    மருத்துவ சிகிச்சையின்போது சிகிச்சை பெற வரும் நோயாளிகளை ஊக்குவிக்க வேண்டும். சிகிச்சையின்போது நமது நிர்வாகத்  திறன், பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் ஆலோசனை அளிப்பதுடன்,  மருத்துவ தொழில் தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார். 
     விழாவில் எக்ஸல் பார்மசி கல்லூரி, பிசியோதெரபி கல்லூரிகளின் பேராசிரியர்கள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.  எக்ஸல் பார்மசி கல்லூரி முதல்வர் மருத்துவர் சி.மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai