Enable Javscript for better performance
உடலில் தீ வைத்துக்கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் அருகே உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். 
    ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி சரஸ்வதி (56). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். தாய் சரஸ்வதி மட்டும் பிலிக்கல்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார்.
    இவருக்கு ஏற்கெனவே இதய நோய் இருந்ததால் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தாராம். இந்நிலையில், தனிமையில் வசிப்பதால் மனமுடைந்த சரஸ்வதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவுயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai