Enable Javscript for better performance
"சாலை விதிகளை பின்பற்றினால் விபத்தை தவிர்க்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    வாகன ஓட்டிகள் முழுமையாக சாலை விதிகளை பின்பற்றினால், விபத்துகளைத் தவிர்க்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் குறிப்பிட்டார்.
    போக்குவரத்து துறை சார்பில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பாவை கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலை வகித்தார்.  நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க.செ.துரைசாமி வரவேற்றார். ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் அதிகமான உயிரிழப்புகள் சாலை விபத்துகளினால் தான் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் அனைத்து சாலை விதிமுறைகளையும் முழுமையாக கடைப்பிடித்து தங்களது பொறுப்புகளை உணர்ந்து வாகனங்களை ஓட்டினால், 100 சதவீதம் விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai