Enable Javscript for better performance
ஜேடர்பாளையம் அருகே நிகழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜேடர்பாளையம் அருகே நிகழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு

    By DIN  |   Published on : 30th November 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில்,  மேலும், ஒரு பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
    ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (26), இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உமாபாரதிக்கும் (25) சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது.
    இந்நிலையில், திருமணத்துக்காக புடவை எடுப்பதற்காக ஜேடர்பாளையத்துக்கு சிவக்குமார், அவரது தாயார் ராசாத்தி (45), உமாபாரதி, மற்றும் அவரது தாயார் ஜோதிமல்லி (42), உறவினர் மயிலாத்தாள் (40) ஆகிய 5 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் நல்லுசாமியின் (50) காரில் சென்றனர்.
    ஜேடர்பாளையம் அருகே ஜமீன்இளம்பள்ளி அருகே சென்ற போது, சீர்காழியில் இருந்து மணல் எடுத்துக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரி, கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த நல்லுசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த 5 பேரும் படுகாயமடைந்து திருச்செங்கோடு மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், உமாபாரதியின் தாயார் ஜோதிமல்லி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai