Enable Javscript for better performance
தமிழக மக்கள் கட்சிமாநில செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினை செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் டாக்டர் எழில்செல்வன் வரவேற்றார். மாநில செயலர் மு.இளையராஜா, மாநில பொருளாளர் அ.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கட்சி வளர்ச்சிக்கு தீவிர பணியாற்றி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது, புது தில்லி மாநில அமைப்பாளராக ம.லோகநாதனை நியமிப்பது, தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழக மாணவர்கள் மட்டும் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்வது என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ம.முருகேசன், கா.சரவணக்குமார், வ.கண்ணைய்யன், க.தமிழ்வாணன், அருள்மொழி தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai