Enable Javscript for better performance
மிலாது நபி: டிச.2-இல்மதுக் கடைகளை மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மிலாது நபி தினத்தை முன்னிட்டு, வரும் டிச. 2-ஆம் தேதி மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு, வரும் டிச. 2-ஆம் தேதி இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் எப்எல்1, 2, 3, 3ஏ, 3ஏஏ மற்றும் 11 ஆகிய உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai