ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்
By DIN | Published on : 30th November 2017 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, தீர்த்தக் குட ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் கும்பாபிஷேக விழா டிச.1-இல் நடைபெறுகிறது. இதனையொட்டி, புதன்கிழமை கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், மஹாலஷ்மி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டணம் சிவன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக காவேரி தீர்த்தம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தக் குடம் எடுத்தனர். தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.