Enable Javscript for better performance
பாவை பொறியியல் கல்லூரி மாணவர் விருதுக்குத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பாவை பொறியியல் கல்லூரி மாணவர் விருதுக்குத் தேர்வு

    By  ராசிபுரம்,  |   Published on : 27th September 2017 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ்., மாணவர் சிறந்த நாட்டு நலப்பணி திட்டத்திற்கான மத்திய அரசின் விருது மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் மற்றும் திட்ட அலுவலர்களின் சிறந்த சமூக சேவை பங்களிப்பிற்காக இந்திரா காந்தி நாட்டு நலப்பணித் திட்ட விருது மற்றும் ரூ. 50 ஆயிரம் ஊக்கத்தொகையினை வழங்கி கெüரவித்து வருகிறது.
     இதன்பேரில், இந்த ஆண்டிற்கான சிறந்த தன்னார்வலர்களுக்கான விருதினை பெறும் வகையில் இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களைச் சார்ந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் விண்ணப்பத்திருந்தனர்.
     இவர்களின் சிறந்த சேவையை பாராட்டும் வகையில் சிறந்த தன்னார்வலர்களுக்கான விருதுக்கு 21 மாணவர்களும், 9 மாணவியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பாவை பொறியியல் கல்லூரியின் இயந்திர மின்னணுவியல் துறையைச் சார்ந்த இறுதி ஆண்டு மாணவர் எம்.ஜெகன் 18-வது இடத்தினைப் பிடித்து தேர்வு செய்யப்பட்டார். இவர் இரத்ததான முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்கள் போன்ற பல்வேறு சேவையில் பங்கேற்றதால், விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
     குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கெüரவிக்கப்பட உள்ளார். தேசிய அளவில் சாதனைப் படைத்த மாணவரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர்கள் (நிர்வாகம்) கே.கே.இராமசாமி, (சேர்க்கை) கே.செந்தில், முதல்வர் எம்.பிரேம்குமார், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் சி.ரத்தினகுமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai