பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியின்போது மையங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம், அரசின் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை கைவிட்டது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்களுக்கு மீண்டும் கல்வித்துறை பணி வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் துறையூர் சாலையில் உள்ள ரெட்டிபட்டி பாரதி கல்வி நிறுவனங்கள் வளாகத்திலும், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் அமைக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்கு பிறகு பணிக்குச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் விடைத்தாள் திருத்தும் பணியின்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தினமும் கொடுக்கப்படும் 20 விடைத்தாள்களில் 10 மட்டும் திருத்தினர், மீதியைத் திருத்தாமல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வந்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை ரெட்டிபட்டி பாரதி கல்வி நிறுவனங்கள் வளாகத்துக்குச் சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்த 12 ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மணிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளிக்கல்வித்துறை செயலர் கோரிக்கைகளை குறித்துப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனவும், போராட்டத்தை கைவிட்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுப் போராட்டத்தை கைவிடுவதாக சங்கம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியது: மொத்தம் உள்ள 74 விடைத்தாள் திருத்தும் மையங்களில், 44 மையங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தால் 75 சதவீதம் அளவுக்கு விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 ஆசிரியர்கள் இந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இப்போது போராட்டத்தை முன்னின்று நடத்திய சங்கம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் விடுவிக்கப்பட்ட 12 ஆசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கல்வித்துறை நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
திரைப்பட நடிகா் கஞ்சா கருப்புவின் சகோதரா் வாகனம் மோதி உயிரிழப்பு
இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

வீரப்பன் விவகாரம்: தனிப் படைக் காவலா்களுக்கு வழங்கப்பட்ட பலன்களைத் திரும்பப் பெறத் தடை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
