ராசிபுரம் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் மாணவ, மாணவியருக்கு நாள்குறிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் பள்ளியின் மாணவர்களுக்கு ஸ்ரீ வாசவி ஆர்யவைஷ்யா மகிளா விபாக் சங்கம் சார்பில், நாள்குறிப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. பாரதி தலைமை வகித்தார். ஸ்ரீவாசவி ஆர்யவைஷ்யா மகிளா விபாக் அமைப்பின் தலைவர் ரேவதி ஜெகந்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்று பள்ளியின் 112 மாணவ, மாணவியருக்கு நாள்குறிப்பேடுகள் வழங்கினர். இதேபோல் கூனவேலம்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி, பாச்சித்தெரு தொடக்கப் பள்ளி, 13-ஆவது வார்டு தொடக்கப் பள்ளி, சுப்பராயன் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி போன்ற பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு நாள்குறிப்புகள் வழங்கப்பட்டன. இதில், கூனவேலம்பட்டி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.