பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் மாணவர் கல்விக் குழு, விளையாட்டுக் குழு, கலை பண்பாட்டுக் குழு என பல்வேறு அமைப்புகளுக்கான மாணவப் பிரதிநிதிகள், துணைப் பிரதிநிதிகள் தேர்வு செய்து நியமிக்கும் "இன்வெஸ்டிச்சர்' விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியை கெளரி தினேஷ் வரவேற்றார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய ஜேசீஸ் அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவரும், சர்வதேச பயிற்சியாளரும், மனிதவள ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜி. சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவர்களாகிய நீங்களும் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்குவதை முதல் லட்சியமாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். சிறந்த இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு அதற்கான வெற்றிப் பாதையை நீங்களே உருவாக்குங்கள் என்றார்.
முன்னதாக கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி. நடராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார். விழாவில் பாவை வித்யாஸ்ரம் குழும பள்ளிகளின் இயக்குநர் சி.சதீஸ், துணை முதல்வர் ரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.