மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவு

பரமத்திவேலூர் வட்டத்தில் அறுவடை செய்யும் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Published on
Updated on
1 min read

பரமத்திவேலூர் வட்டத்தில் அறுவடை செய்யும் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 பரமத்திவேலூர் வட்டத்தில் எஸ். வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
 இந்தப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
 கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
 கடந்த வாரம் மரவள்ளி டன் ஒன்று ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையானது. நிகழ் வாரம் டன் ஒன்று ரூ. 5,250 வரை விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதால் மரவள்ளியின் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.