தி.மு.க தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையொட்டி பரமத்தி வேலூரில் உள்ள தினசரி வாழைத்தார் ஏலச் சந்தை மற்றும் பிலிக்கல்பாளையம் வெல்ல, சர்க்கரை ஏலச் சந்தைகளில் புதன்கிழமை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை மறைந்ததையடுத்து பரமத்தி வேலூர் நகர் பகுதியில் வர்த்தக நிறுவனத்தினர் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர்.
தி.மு.க கொடி கம்பங்களில் அறை கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டன. மேலும் சில பேருந்துகளின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனால் வேலூர் காமராஜர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஆட்டோக்கள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பரமத்திவேலூரில் தினசரி நடைபெற்று வந்த வாழைத்தார் ஏலச் சந்தையும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் வெல்ல ஏலச் சந்தையிலும் புதன்கிழமை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.