Enable Javscript for better performance
அருந்ததியர் தொழிலாளர்களின் வாழ்வுரிமை கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அருந்ததியர் தொழிலாளர்களின் வாழ்வுரிமை கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதித்தமிழர் கட்சியின் சேலம், கரூர் நாமக்கல் மாவட்ட தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆகியவை இணைந்து அருந்ததியர் தொழிலாளர்களின் வாழ்வுரிமை கருத்தரங்கை திருச்செங்கோட்டில் வியாழக்கிழமை நடத்தினர்.
    இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சுப.இளங்கோவன் தலைமையில் கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் ஜக்கையன் கலந்து கொண்டு பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் சுகந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மோகன் கார்த்திகேயன், ஆதித்தமிழர் கட்சி நிதிச் செயலாளர் விடுதலை வீரன், மாநில தொழிலாளர் அணி தலைவர் துரை அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் ஜக்கையன் பேசியதாவது: அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தினசரி கூலியை ரூ. 800 ஆக வழங்க சட்டம் இயற்ற வேண்டும். சாயப் பட்டறை, விசைத்தறி, ஜவ்வரிசி தொழிற்சாலைகள், கோழிப் பண்ணை மற்றும் போர்வெல் பணிகளில் கொத்தடிமைகளாய் பணிபுரியும் தொழிலாளர்களை அரசு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai