Enable Javscript for better performance
கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்: 200 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்: 200 மாணவர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான திறனறி போட்டிகளில் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.
    நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான மாணவ, மாணவியருக்கு ஓவியம், கட்டுரை, வினாடி-வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
    இதில் பெரியார் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.
    கல்லூரி முதல்வர் அ.லீலாகுளோரிபாய் தலைமை வகித்தார். புள்ளியியல் துறை தலைவர் மு.ரவிச்சந்திரன் வரவேற்றார். விலங்கியல் துறைத் தலைவர் விஜயராஜன், வேதியியல் துறைத் தலைவர் லோகநாதன் ஆகியோர் பேசினர். பொருளியல் துறைத் தலைவர் குமரவேலு நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai