Enable Javscript for better performance
நாமக்கல்லில் ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழக அரசு அறிவித்த 2017ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், ஈட்டிய விடுப்பு தொகை வழங்க வேண்டும், சட்டப்படி 8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை முறையாகப் பராமரிக்கவேண்டும்.
    தொழிற்சங்க விரோத போக்கை கைவிட வேண்டும், பழி வாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.
    ஆர்ப்பாட்டத்துக்கு
    மாவட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். மாநில துணை பொருளாளர் சந்திரன், கோவை மண்டல தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். மாவட்டத் துணைத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai