Enable Javscript for better performance
நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.10) பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் வருவாய் வட்டம் தோறும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளன. நாமக்கல் வட்டத்தில் வசந்தபுரம், ராசிபுரம் வட்டத்தில் தொ.பச்சுடையாம்பாளையம், திருச்செங்கோடு வட்டத்தில் மொளசி, பரமத்திவேலூர் வட்டத்தில் சிறுகிணத்துப்பாளையம், கொல்லிமலை வட்டத்தில் தோட்டிக்காடு சேந்தமங்கலம் வட்டத்தில் மலைவேப்பங்குட்டை, குமாரபாளையம் வட்டத்தில் ஓடப்பள்ளி ஆகிய நியாய விலைக்கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
    இதில் பொதுவிநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம். மேலும் பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும், குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை தெரிவித்தால் விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai