Enable Javscript for better performance
பிப்.11இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 59,000 பேர் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    பிப்.11இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 59,000 பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 09th February 2018 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை நாமக்கல் மாவட்டத்தில் 59,000 பேர் எழுதுகின்றனர்.
    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆம் தேதி குரூப் 4 இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் 97 பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மொத்தம் 59,006 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
    இதற்காக 197 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 197 மையங்களிலும், 197 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு எழுதும்போது முறைகேடுகள் நடக்காமல் இருக்க துணை ஆட்சியர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் நிலையில் 26 பறக்கும் படை அலுவலர்களும், துணை வட்டாட்சியர் தலைமையில் 40 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இதற்கென 66 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்வுக் கூடங்களில் தேர்வு நடைபெறுவதை 131 விடியோகிராபர்கள் படம் எடுப்பார்கள். அனைத்து இணையதள மையங்களும் காவல் துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் ஞாயிற்றுகிழமை அன்று சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    தேர்வு மையத்தில் தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனிவருங்காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என்பதால், அனைத்துத் தேர்வர்களும் தேர்வாணைய விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் தேர்வு எழுதுமாறு
    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    தேர்வு மையத்துக்குள் கைப்பை, புத்தகங்கள், செல்லிடப்பேசி, கால்குலேட்டர், மின்னணு, கைகடிகாரங்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டுவரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு முடிந்த பின்னரே தேர்வுக் கூடத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai