Enable Javscript for better performance
ராசிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் புதிய விளக்கு தூணில் விரிசல்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் புதிய விளக்கு தூணில் விரிசல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் புனரமைப்பு திருப்பணிக்காக 30 அடி உயரத்தில் செதுக்கப்பட்டு வரும் திருக்கோடி கல்தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    ராசிபுரம் நகரில் உள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில். மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலின் ராஜகோபுரம், நுழைவு கோபுரம், விளக்கு தீபம் ஏற்றும் திருக்கோடி தூண் போன்றவற்றின் திருப்பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை ஒப்புதலுடன் பல லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் இந்த பணிகளுக்கான பொருள் செலவை தனியார் ஒருவர் ஏற்றுள்ளார். சுமார் 20-க்கும் மேற்பட்ட ஸ்பதிகள் கோயிலின் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றின் கல் செதுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுமார் 18 டன் எடையுடன் 30 அடி உயரத்தில் கோயிலின் திருக்கோடி தூண் செதுக்கும் பணிகள் பல்வேறு கலை நயத்துடன் நடந்து வந்த நிலையில், இந்த தூண் இடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தூண் மதிப்பு மட்டும் சுமார் 9 லட்சம் என கூறப்படுகிறது. இந்த தூண் செதுக்கும் பணி சுமார் 4 மாதங்களாக நடந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த திருக்கோடி கல்தூண் சேதமடைந்துள்ள நிலையில், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூண் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இந்து சமய அறநிலையத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai