Enable Javscript for better performance
வெண்ணந்தூரில் வேளாண்மைத் துறை திட்டப் பணிகள் குறித்து இணை இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வெண்ணந்தூரில் வேளாண்மைத் துறை திட்டப் பணிகள் குறித்து இணை இயக்குநர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெண்ணந்தூர் வட்டாரப் பகுதியில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை இணை இயக்குனர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    வெண்ணந்தூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் 2017-18 ஆண்டுக்கான செய்து முடிக்கப்பட்ட திட்டப் பணிகளான நிலக்கடலை பயிர் விதைப் பண்ணை அமைத்தல், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் சோலார் விளக்குப் பொறி விநியோகம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான் விநியோகம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பவர் டிரில்லர் விநியோகம் போன்ற வேளாண்மைத் துறையின் திட்டங்கள் குறித்து மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    மேலும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் 2017-18 திட்டப் பணிகளான சோலார் விளக்குப் பொறி செயல்விளக்கம், அசோலா செயல்விளக்கம், மண்ணில்லா தீவன தயாரிப்பான ஹைட்ரோபோனிக்ஸ் அமைத்தல் போன்ற வெண்ணந்தூர் வட்டார வேளாண்மைத் திட்டப் பணிகள், அட்மா திட்டப் பணிகளையும் ஆய்வு
    மேற்கொண்டார்.
    இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மா.செளந்தர்ராஜன், வெண்ணந்தூர் துணை அலுவலர் பழனிவேல், உதவி விதை அலுவலர் ரத்தினவேல், வேளாண்மை உதவி அலுவலர்கள் அந்தோணிசாமி, ஆரோக்கியசாமி, கருப்புசாமி, திருநாவுக்கரசு,வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மா.ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் 2017-18 ஆண்டுக்கான மத்தியத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டப் பயனாளிகளிடம் திட்டத்தின் மூலம் வேளாண்மைக் கருவிகள் பெறப்பட்ட நோக்கம், சிறப்பம்சம், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பெறப்பட்டதன் லாபம் போன்ற விவசாயிகளின் வெற்றிக் கதைகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai