Enable Javscript for better performance
2 மாதங்களுக்குப் பிறகு லேசான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    2 மாதங்களுக்குப் பிறகு லேசான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 09th February 2018 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை இரவு லேசான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி, வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செங்கோட்டில் 72 மி.மீ பதிவாகி இருந்தது.
    வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்) திருச்செங்கோடு 72, குமாரபாளையம் 27, ராசிபுரம் 25, எருமப்பட்டி 22, நாமக்கல் 20, பரமத்திவேலூர் 16, சேந்தமங்கலம் 13, புதுச்சத்திரம் 12, மங்களபுரம் 6. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 213 மி.மீ. இந்த மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2 மாதங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி பருத்திக்கு இந்த மழை உயிர் மழையாக மாறி உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்போதே பல இடங்களில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியுள்ள நிலையில், இந்த மழை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இந்த மழை தொடர்ந்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடிநீர் பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம் என்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai