சுடச்சுட

  

  "காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதன் மூலம் சவால்களை எதிர்கொள்ள முடியும்'

  By  நாமக்கல்  |   Published on : 14th June 2018 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதன் மூலம் சவால்களை எதிர்கொண்டு சாதிக்க முடியும் என்றார் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன்.
   நாமக்கல் டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில் "நம்மால் முடியும்' என்ற தலைப்பிலான தன்னம்பிக்கை கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
   கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தார். செயலர் கே.நல்லுசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எம்.ஆர்.லட்சுமி நாராயணன் வரவேற்றார்.
   சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் பேசியது: மகளிர் உயர்கல்வி கற்பதால் வீடு மட்டுமல்லாமல் நாடும் உயர்வு பெறுகிறது. கடின உழைப்பு என்றும் வீண் போகாது. திட்டமிட்டு செய்யும் செயல் பெரும்பாலும் தோல்வியைத் தருவதில்லை.
   நேர மேலாண்மை, அர்ப்பணிப்பு, தற்போதைய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுதல், உடல் மொழித்திறன், பிறருடன் தகவல் பரிமாற்றம், காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளுதல் போன்றவை இன்றைய போட்டிகள் நிறைந்த உலகத்துக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. வெற்றி என்பது ஒரே இரவில் வருவதில்லை. சினிமா வேறு வாழ்க்கை வேறு. கனவுலகம் என்றும் பயன் தராது. நனவுலகமே திறமையினை மேம்படுத்த உதவும் என்றார்.
   இந்நிகழ்வில், டிரினிடி மெட்ரிக் பள்ளித் தலைவர் ஆர்.குழந்தைவேல், செயலர் டி.சந்திரசேகரன், கல்லூரி நிர்வாக அலுவலர் என். எஸ்.செந்தில்குமார், தமிழ்த் துறை பேராசிரியைகள் டி.கே.அனுராதா, ஆர்.சாவித்திரி, எஸ்.ஜெயமதி, ஏ.லதா, ஜெ.பாரதி, எஸ்.மைதிலி, பி.விஷ்ணுப்பிரியா, சி.கோபியா மற்றும் துறை மாணவியர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai