Enable Javscript for better performance
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர் பரமத்தி நீதிமன்றத்தில் சரண்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர் பரமத்தி நீதிமன்றத்தில் சரண்

    By DIN  |   Published on : 24th March 2018 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம்,சேந்தமங்கலம் அருகே அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் வெள்ளிக்கிழமை பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆர்ஆர்பி.சுரேஷ் கடந்த 20ஆம் தேதி சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பேளுக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய வெட்டுகாடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் விமல்குமார் (28) என்பவரை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அரசு பேருந்து ஓட்டுநரான தனது நன்பர் சிவக்குமாருடன் சேர்ந்து ஆர்ஆர்பி. சுரேஷை கொலை செய்ததாகக் கூறினாராம். இதையடுத்து, சிவக்குமாரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சிவக்குமார் (41) பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸார் கூறியதாவது: சரணடைந்த சிவக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai