Enable Javscript for better performance
அரசு கலைக் கல்லூரி வணிகவியல் மன்ற தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சீ.மணிமேகலை தலைமை வகித்தார். முதுநிலை முதலாமாண்டு மாணவர் தினேஷ் விக்னேஷ் வரவேற்றார். முனைவர். ஆர். ஈஸ்வரன் அறிமுகவுரை நிகழ்த்தினார். வணிகவியல் துறைத் தலைவர் கு. தமிழ்ப்பாவை, அரசியல்சார் அறிவியல் துறைத் தலைவர் கு. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
    விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் செளடேஸ்வரி கல்லூரி முதல்வர் வி. பாலாஜி பங்கேற்று, மன்றத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்துப் பேசினார். கல்லூரி பேராசிரியர்கள் பொ. ராஜேந்திரன், து. சசிகுமார், எஸ்.காளியண்ணன், ஆர்.சிவகுமார், பிரகாஷ், ஆறுமுகம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை முனைவர். ஜி.சாந்தி தொகுத்து வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai