Enable Javscript for better performance
ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
    ஈடுபட்டனர்.
    நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் குழந்தான் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மணிவேல், நாமக்கல் நகர செயலர் தம்பிராஜா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
    மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டப்பாளையம் ஊராட்சிப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை வழங்காமல் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். இதனால் 500-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேட்டப்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai