Enable Javscript for better performance
கொல்லிமலையில் ரூ.73 லட்சம் செலவில் பள்ளி சீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    கொல்லிமலையில் ரூ.73 லட்சம் செலவில் பள்ளி சீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

    By DIN  |   Published on : 24th March 2018 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்லிமலை வாழவந்திநாடு அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் ரூ.73 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தொடங்கிவைத்தார்.
    கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், வாழவந்திநாடு ஊராட்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு,உறைவிட மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் செய்ய பள்ளி நிர்வாகத்தினர் சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
    இதையடுத்து, எம்எல்ஏ அரசிடமிருந்து பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.73 லட்சம் நிதியை பெற்றுக் கொடுத்தார். அந்த நிதியைக் கொண்டு பள்ளிக் கட்டடங்கள் பழுது பார்க்கும் பணிக்காக ரூ.19 லட்சம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக ரூ.19 லட்சம், மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக கழிப்பறை அமைக்க தலா ரூ.15 லட்சம், புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் பொருத்த ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகளை பள்ளி வளாகத்தில் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai