Enable Javscript for better performance
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கண்ணாடி கதவைத் திறந்து உள்ளே இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த சின்னத்துரை மகன் செந்தில்குமார் (38). இவர் பேட்டையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை மதியம் வழக்கம் போல் நிதி நிறுவனத்தின் முன்பக்க கண்ணாடி கதவை பூட்டிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றாராம். பின்னர் மாலையில் நிதி நிறுவனத்தில் கண்ணாடி கதவு திறந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த செந்தில்குமார், நிதி நிறுவனத்தினுள் சென்று பார்த்த போது உள்ளே வைத்திருந்த ரூ.2 லட்சம் காணாமல் போனது தெரியவந்தது. தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai