Enable Javscript for better performance
அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 5- ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நாமக்கல்லில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
    தடகளம், கபாடி, கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் நாமக்கல் செல்வம் கல்லூரியிலும்,  டென்னிஸ் போட்டி நாமக்கல் வகுரம்பட்டி எசிபி டென்னிஸ் அகாதெமியிலும், இறக்குப்பந்து போட்டி நாமக்கல் ஆபிசர்ஸ் கிளப்பிலும், மேசைப்பந்து போட்டி நாமக்கல் விக்டோரியா ஹாலிலும் நடைபெறும். கால்பந்து தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் மகளிர்க்கு தனியே போட்டிகள் நடத்தப்படும்.  
     அரசுத் துறை அலுவலகங்களில் பணி செய்யும் ஊழியர்கள் இதில் பங்கேற்கலாம். காவல் துறை, தீயணைப்புத் துறையினர் பங்கேற்க முடியாது. அரசுப் பணியில் சேர்ந்து 6 மாதங்களுக்கு உள்பட்டவர்கள் இதில் சேர முடியாது. ஒப்பந்த பணியாளர்கள், தினக் கூலி பணியாளர்கள் பங்கேற்க முடியாது.
    பங்கேற்க விரும்பும் அரசு ஊழியர்கள் 5 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு முன்னர் போட்டி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். கண்டிப்பாக அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai