Enable Javscript for better performance
ஆடை வடிவமைப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆடை வடிவமைத்தல் குறித்த இலவச பயிற்சியில் சேர பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து நாமக்கல் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான ஆடை வடிவமைத்தல் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
    30 நாள்கள் நடைபெறும் பயிற்சிக்கு 35 பேர் மட்டுமே தேர்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். பஞ்சாபி, பாட்டியாலா, அரபிக், ராஜஸ்தானி உள்ளிட்ட நவீன மாடல் சுடிதார்கள், பிளவுஸ் வகைகள், பள்ளி சீருடைகள், ஆண்களுக்கான பேன்ட், சர்ட் உள்ளிட்ட  ஆடைகளை வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படும். எனவே, ஆர்வம் உள்ளவர்கள் வரும் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி பொருள்கள், உணவு இலவசமாக அளிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai